சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் காலனியை மற்றும் கனகரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் இரண்டு வெவ்வேறு சாதிகளை சேர்ந்தவர்கள், இவர்களிடையே ஏற்கனவே சாதி மோதல் இருந்து வந்தது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நாகை மாவட்டம் கொடியம்பாளையத்தில் கோவில் விழாவையொட்டி நடந்த பாட்டு கச்சேரிக்கு இரண்டு ஊர்களை சேர்ந்த இளைஞர்கள் சென்றனர், அப்போது அங்கே இரு ஊர் இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் தெற்கு பிச்சாவர காலனியை சேர்ந்த இளைஞர்கள் தாக்கப்பட்டதாக தெற்கு பிச்சாவர காலனி இளைஞர்கள் கொடுத்த புகாரின் பேரில் நாகை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இதன் மீது விசாரணை நடத்தும்படி நாகை போலீசார் கிள்ளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை கனகரம்பட்டு கிராமத்தை சேர்ந்த சில இளைஞர்கள் கட்டிட வேலை செய்து விட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது கிள்ளை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் அந்த இளைஞர்களை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த கனகரம்பட்டு கிராம மக்கள் சுமார் 200–க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் சப்–இன்ஸ்பெக்டர் ஞானசேகரனை சுற்றி வளைத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், கிராம மக்கள் பிடியில் இருந்து சப்–இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் வாக்குவாதம் செய்யாமல் வெளியேறிவிட்டார்.
கிராம மக்கள் சப்–இன்ஸ்பெக்டர் ஞானசேகரனை கண்டித்தும், சப்–இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் சாதி மோதல்களை தூண்டுவதாகவும், அவர் ஒரு சாதிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த வழியாக வந்த 3 தனியார் பஸ்களை கிராம மக்கள் சிறை பிடித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிராஜ், அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து காவல் துறை மேலிட அதிகாரிகளிடத்தில் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். சிறை பிடித்த பஸ்களையும் விடுவித்தனர்.
two villages near Chidambaram got clashes for caste, one village people protest against the area sub inspector saying that he is supporting one caste and taking action against another caste people
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.