ஒவ்வொரு ஆணும் தன் மனைவி இப்படி இருக்க வேண்டும் , அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பர் . ஆனால் பொதுவாக ஆண்கள் தங்கள் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று நடத்திய ஆய்வின் முடிவு தான் இது .
1 ) வேலைக்குச் செல்ல வேண்டும் :
83.5% ஆண்கள் தங்கள் மனைவி வேலைக்குச் செல்ல வேண்டும் என்றே நினைக்கின்றனர் . தாங்களும் வேலைக்குச் செல்வதால் வீட்டில் தனியாக இருக்க வேண்டும் என்பதால் , மனைவி வேலைக்குச் செல்ல வேண்டும் என விரும்புகின்றனர் .
2 ) கிரிக்கெட் பார்க்க வேண்டும் :
கிரிக்கெட் என்பது இந்தியர்கள் அனைவரின் இரத்தத்தில் கலந்து விட்ட ஒன்று . பொதுவாக கிரிக்கெட் பார்க்கும் போது தங்களுக்கு கம்பெனி கொடுக்க வேண்டும் என்று ஆண்கள் மனைவியிடம் எதிர்ப்பார்க்கின்றனர் . 76.6% ஆண்கள் தங்கள் மனைவி கிரிக்கெட் பார்க்க வேண்டும் , கிரிக்கெட் வீரர்களை பார்க்க கூடாது என்று விரும்புகின்றனர் .
3 ) செய்திகள் அறிந்து , தங்கள் கருத்துகளை பகிர வேண்டும் :
73.8% ஆண்கள் தங்கள் மனைவி சமீபத்திய நிகழ்வுகளை அறிந்து இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர் . மேலும் அந்த நிகழ்வு பற்றி தங்கள் கருத்தை தெரிவிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என்றும் விரும்புகின்றனர் .
4 ) டிவி சீரியல்கள் பார்க்க கூடாது :
80% ஆண்கள் தங்கள் மனைவி ரியாலிட்டி டிவி சீரியல்கள் பார்க்க கூடாது என்று எதிர்பார்க்கின்றனர் .
5 ) மொபைலே கதி என இருக்க கூடாது :
78.2 % ஆண்கள் மொபைலே கதி என இருப்பவர்களை வெறுப்பதாக கூறுகின்றனர் . மொபைலை உபயோகிக்கும் நேரத்தில் தங்களுடன் செலவிட வேண்டும் என விரும்புகின்றனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.