நெல் பயிரிடுதலில் சாதனை புரிந்த பீகார் விவசாயியை தங்கள் நாட்டு விவசாயிகளுக்கு கற்று கொடுக்க தென் ஆப்ரிக்க அரசு ஐந்து வருட ஒப்பந்தத்தில் வேலைக்கு எடுத்துள்ளனர் . அவருக்கு மாதம் 50,000 ரூபாய் என சம்பளம் நிர்ணயம் செய்துள்ளனர் .
அந்த விவசாயியின் பெயர் சுமந்த் குமார் . இது குறித்து சுமந்த் குமார் கூறுகையில் , "தென் ஆப்ரிக்க விவசாயிகளுக்கு எஸ்.ஆர்.ஐ முறை மூலம் நெல் பயிரிடும் முறையை கற்று கொடுக்கும் இந்த அரிய வாய்ப்பை எனக்கு பெற்று தந்தது பேஸ்புக் தான் " என்றார் . இவர் ஒரு ஹெக்டரில் எஸ்.ஆர்.ஐ முறை மூலம் 224 குயிண்டால் நெல்லை பயிரிட்டு சாதனை புரிந்து உள்ளார் .
இவர் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்து உள்ளார் . இவரின் பேஸ்புக் பக்கம் மூலம் தென் ஆப்ரிக்க அரசு இவரை தொடர்பு கொண்டுள்ளது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.