மு.க.அழகிரி திமுகவுக்கு திரும்ப பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில் தயா பொறியியல் கல்லூரிக்காக கோவில் நிலத்தை ஆக்கிரமித்ததாக வழக்கு பாய்ந்துள்ளது, வழக்கு பதிவை தொடர்ந்து இன்று இரவுக்குள் மு.க.அழகிரி கைது செய்யப்படலாம் என மதுரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சிவரக்கோட்டையில் மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி உள்ளது. தயா கல்லூரியை கட்டுவதற்காக கல்லூரியீன் அருகிலுள்ள விநாயகர் கோவிலின் 44 சென்ட் நிலத்தை திட்டமிட்டு போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக மு.க.அழகிரி மீது அதே கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கடந்த ஜூன் மாதம் மதுரை கலெக்டரிடம் புகார் மனு அளித்தார்.
இது குறித்து கடந்த மூன்று நாட்களாக மதுரை அரசு வட்டாரங்களில் நடந்த நீண்ட கலந்தாய்வுக்கு பின் மு.க.அழகிரி மீது நிலஅபகரிப்பு புகார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று இரவுக்குள் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
# ஸ்டாலின் ஹேப்பி அண்ணாச்சி
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.