சென்னை, கோயம்புத்தூர் உட்பட பல மாநகரங்களில் ஹாத்வே நிறுவனம் கேபிள் கணெக்சன் கொடுத்து எம்.எஸ்.ஓ நடத்தி வந்தது, திமுக ஆட்சி காலத்தில் ஹாத்வே நிறுவனத்தின் கேபிள்களை ரவுடிகளை வைத்து அறுத்தும் போலிஸ் உட்பட பல அதிகாரங்களை வைத்து மிரட்டியும் தமிழகத்தில் இருந்து ஹாத்வே வை விரட்டி அடித்தனர் மாறன் பிரதர்ஸ்.
மேலும் கேபிள் பிசினசில் தாங்கள் மட்டுமே கொடி நாட்ட வேண்டும் என்று சிறு கேபிள் ஆப்பரேட்டர்கள் முதல் பெரும் நிறுவனங்கள் வரை மிரட்டி ஒழித்தனர், தங்கள் கேபிள் பிசினசை கொண்டு போட்டி சேனல்களான விஜய், ராஜ், புதியதலைமுறை, மக்கள் தொலைகாட்சி உட்பட பல முக்கிய சேனல்களில் முக்கியமான நிகழ்ச்சிகள் ஓடும் போது அவைகளை கேபிளில் காட்டாமல் நிறுத்துவது, அதன் ஒளிபரப்பில் சிக்கல் ஏற்படுத்துவது என்று கேவலமாக நடந்து கொண்டனர்.
இந்நிலையில் சென்னையில் கேபிள் ஒளிபரப்பு செய்து வரும் மாறன் பிரதர்ஸின் கால் கேபிள்சை( Kals Cables Pvt Ltd ) மூடச் சொல்லி மத்திய செய்தி ஒளிபரப்புத் துறைஅமைச்சக அலுவுலத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அவர்களது வியாபார நடவடிக்கைகளை பதினைந்து நாட்களுக்குள் முடித்துக் கொள்ளவும் உத்தரவு போட்டு விட்டது.
அந்த செய்தியை அவர்கள் தொலைக் காட்சியிலேயே 'வேறு இணைப்புக்கு மாற்றிக் கொள்ளுங்கள்' என்று எம்.எஸ்.ஓ.ஆப் பரேட்டர்களிடம் கேட்டு கொண்டு ஸ்க்ரோல் ஓட்டுகிறது.
அனைவரையும் ஒழிக்க நினைத்த மாறன் பிரதர்ஸ்சின் பிசினஸ் சாம்ராஜ்யம் அழிய ஆரம்பித்துள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.