பிரேசில் நாட்டில் ஒரு அதிசியம் நடந்துள்ளது. அந்த நாட்டை சேர்ந்த 54 வயது மிக்க நபர் ஒருவர் உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர். இதனை நம்பி அவரது உறவினர்கள் அவரது இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்தனர்.
பிணவறையில் அவரை கொண்டு வந்த போது அவரது உடலில் அசைவு தெரிந்தது. உடனடியாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிருடன் இருப்பதாக கூறினர். அதன் பின்பு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அதில் அவர் நலமுடன் வந்தார். ஆனால் அவரால் வாய் பேச முடியவில்லை. தனது அனுபவத்தை ஒரு பேப்பரில் எழுதி தனது உறவினர்கள் மற்றும் மருத்துவர்களிடம் காட்டினார். இதனை பார்த்த அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி. இந்த சம்பவம் பிரேசில் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.