இந்தியாவில் சியோமி நிறுவனம் தனது இரண்டாவது மொபைலை நேற்று வெளியிட்டது . இந்த மொபைலின் பெயர் சியோமி ரெட்மி - 1எம் ( Xiaomi Redmi - 1s ) . இந்த மொபைலை ஆன்லைனில் மட்டுமே வாங்க முடியும் . இந்த மொபைலின் விற்பனை செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது .
இந்த மொபைல் சீனாவில் மே மாதம் விற்பனைக்கு வந்தது . இந்தியாவில் 6,999 ரூபாயில் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக 5,599 ரூபாயில் விற்பனைக்கு வந்தது . மேலும் இந்த விலை உயர்த்தப்பட மாட்டாது என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது .
மொபைலில் உள்ள அம்சங்கள் :
கேமரா - 8 MP
தொடுதிரை - 4.7 இன்ச்
ஆண்ட்ராய்ட் வெர்சன் - 4.3 ஜெல்லிபீன் ( அப்கிரடின் மூலம் 4.4 கிட்கட் )
ராம் - 1 ஜிபி
இண்டர்னெல் ஸ்டோரேஜ் - 8 ஜிபி
மேலும் சியோமி பயனாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் பிளிப் கேஸ் , ஸ்கிரின் கவர் , ரியர் பேனல் ஆகியவற்றை விற்பனை செய்ய உள்ளது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.