பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான பாமீலா அண்டர்சன் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் செய்யப் போவதில்லை என்று பொதுவில் அறிவித்துள்ளார் . ஏ.எல்.எஸ் நிறுவனம் தனது ஆராய்சிகளில் , மிருகங்களை பயன்படுத்துவதால் ஏ.எல்.எஸ் நிறுவனத்தின் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் செய்யப் போவதில்லை என அறிவித்துள்ளார் .
இந்த பிரபலமான சேலஞ்சை இதுவரை பில்கேட்ஸ் , புஷ் என பல பிரபலமானவர்கள் எடுத்துள்ளனர் . ஆனால் பிரபலமான பமீலா அண்டர்சன் இதை எதிர்த்துள்ளதால் அனைவரையும் இதைப் பற்றி யோசிக்க வைத்து உள்ளார் .
இது குறித்து அவர் தெரிவிக்கையில் , " என்னால் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் செய்ய முடியாது . எனக்கு அந்த சவால் பிடித்து இருக்கிறது . சவால்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நானும் விரும்புகிறேன் அதனால் அந்த மகிழ்ச்சியை உங்களிடம் பறிக்க நான் விரும்பவில்லை . எனினும் யோசித்துப் பார்த்தால் , நம்முடைய செயல்களில் ஒன்று இடிக்கிறது . எனவே நான் ஏ.எல்.எஸ் நிறுவனத்தை விலங்குகளின் மீது பரிசோதனை செய்வதை நிறுத்த சேலஞ்ச் செய்கிறேன் " என்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.