ஃபேஸ்புக்கில் ஸ்பேம் மெசேஜ்கள் ஆப்ரிக்க இன பெண்கள் பெயரில் வருவதுண்டு, அதனால் அடிக்கடி ஆப்ரிக்க அழகிகள் தொல்லை என்று ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுவார்கள். ஆனால் தமிழக எஞ்சினியர் ஒருவர் உகாண்டா நாட்டு பெண்ணை காதலித்து தமிழகத்திற்கு அழைத்து வந்து மணந்துள்ளார்
வேலூர் மாவட்டம் ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கத்தை சேர்ந்த தம்பதிகள் மணி - ராதா, விளாப்பாக்கத்திலேயே இவர்கள் ஓட்டல் நடத்தி வருகின்றனர்.
இவர்களது மகன் 30 வயதான கலாநிதி (30). "லெதர் டெக்னாலஜி" மற்றும் "பிசினஸ் அட்மினிஸ்ட்ரேசன்" படித்தவர். அவர், கடந்த ஆண்டு உகாண்டாவுக்கு வேலைக்கு சேர்ந்தார், அதே நிறுவனத்தில் வேலை பார்த்த உகாண்டாவை சேர்ந்த இசன்யூஆரியட் என்ற பெண்ணுடன் கலாநிதிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரின் நட்பு காதலாக மாறியுள்ளது. மேலும் இவர்களின் காதலை இசன்யூஆரியட்டின் பெற்றோரும், சகோதரிகளும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். கலாநிதியின் பெற்றோரும் இந்த காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு கலாநிதி இந்தியா திரும்பியுள்ளார், ஆனாலும் செல்போனில் காதல் தொடர்ந்துள்ளது, கடந்த 2 நாட்களுக்கு முன் இசன்யூ ஆரியட் தனது பெற்றோர்கள் சம்மதத்துடன் கலாநிதியை திருமணம் செய்து கொள்ள விளாப்பாக்கத்திற்கு வந்தார். அதைத்தொடர்ந்து ஆற்காட்டை கலாநிதி– இசன்யூ ஆரியட் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின்னர் மணமக்கள் உகாண்டா செல்லாமல் இங்கேயே வசிக்கப் போவதாக தெரிவித்தார்கள்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.