தமிழக முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிறை தண்டனை தீர்ப்பை வரவேற்றுக் கொண்டாடிய இலங்கை அரசை எதிர்த்து புதுக்கோட்டை தோப்புக்கொல்லை முகாமில் இலங்கைத்தமிழர்கள் கருப்புக்கொடி ஏந்தி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக முதலவர் ஜெயலலிதாவுக்கு கடந்த 27 -ம் தேதி ரூ.100 கோடி அபாரதமும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இச்சம்பவம் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் இலங்கை தமிழர்களிடம் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆனால், இலங்கை அரசு அண்மையில் சிங்களவர்கள் அதிகமான மாவட்டங்களாக திரிகோணமலை அம்பாறை மற்றும் தலைநகர் கொழும்பு ஆகிய இடங்களில் இனிப்புகளை வழங்கியும் பட்டாசு வெடித்தும் சில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தும் கொண்டாடியதாக செய்திகள் வெளியாது. இது அங்குள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது.
இலங்கை அகதிகளை பொறுத்தவரைக்கும் 2009 -ல் இலங்கையில் இனப்படுக்கொலை நடந்த போது மத்தியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் மாநிலத்தில் இருந்த திமுக அரசும் அப்போது தங்களுக்கு ஏதாவகு உதவிiயும் செய்ய முன் வரும் என எதிர்பார்த்தனர். ஆனால், அதை நடக்கவில்லை. ஆனால், தமிழத்தில் அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களின் நிலைமையை அறிந்து தமிழக மக்களக்கு வழங்குவதைப் போல பல்வேறு நலத்திட்டங்களை தமிழ் அகதிகளுக்கும் முதல்வர் ஜெயலலிதா வழங்கி வருகிறார். இதன் காரணமாக முதல்வர் ஜெயலலிதா அகதிகள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் தோப்புக்கொல்லை முகாம்வாசிகள் புதன்கிழமை காலையில் ஒன்று திரண்டு கருப்புக்கொடிகளை ஏந்தி, தமிழக முதல்வருக்கு எதிரான தீர்ப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக முழக்கமிட்டு தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஏற்பாடுகளை, முகாம் வாசிகள் அ.கணேசன், அல்போன்ஸ்ராஜா ஆகியோர் செய்திருந்தனர். இப்போராட்டத்தில் 50 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.