நேற்று இந்திய குத்துச் சண்டை வீராங்கனை சரிகா தேவிக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது . ( http://www.satrumun.net/2014/10/saritha-devi-cries-in-ceremony-due-to-false-judgement.html ) இந்த போட்டியில் சரிகாவை எதிர்த்து போட்டியிட்டவர் தென் கொரியாவைச் சேர்ந்தவர் .
இதேப் போன்று இந்தியாவின் தேவேந்திரோ சிங்கிற்கும் ஒன்சைட்டாக தீர்ப்பு வழங்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டார் . இவரை எதிர்த்து விளையாடிவரும் கொரியாவைச் சேர்ந்தவர் தான் .
இதேப் போன்று மங்கோலியா நாட்டு வீரர் ஒருவருக்கும் இதே நிலமை தான் ஏற்பட்டது . அவர் சண்டை நடந்த இடத்தை விட்டு வெளியேறாமல் அங்கேயே தனது எதிர்ப்பை தெரிவித்தார் . ஆனால் அவர் வலுகட்டாயமாக நடுவர்களால் வெளியனுப்பப்பட்டார் . இவரை எதிர்த்து விளையாடிவரும் கொரியாவைச் சேர்ந்தவர் தான் . ஆனால் மங்கோலிய நாட்டு வீரர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அடுத்து நடக்க இருந்த போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என அறிவித்தனர் .
ஆனால் இந்தியாவைச் சேர்ந்த எந்த அதிகாரிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது வருத்தமானச் செய்தி .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.