ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடந்து வருகிறது . இந்த போட்டிகளின் 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது . இந்தப் போட்டியில் ஈராக்கின் அட்னான் அல்மன்ட்பேஜ் என்பவர் 4 வது இடம் பிடித்தார் . முதல் மூன்று இடங்கள் பிடித்த அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இவருக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது .
முதல் இடம் பிடித்த சவூதியின் மொஹம்மது அப்துலாசிஸ் மற்ற வீரர்கள் ஓடுவதற்கு தடை செய்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் . மற்ற இரண்டு வீரர்களும் தங்களின் பாதையில் இருந்து தவறாக ஓடியதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் .
இது குறித்து அட்னான் அல்மன்ட்பேஜ் கூறுகையில் , " நான் இன்று பதக்கம் வெல்வதற்கு நன்றிக் கடமை பட்டுள்ளேன் . அந்த மூன்று பேரும் எனக்கு போட்டியாக இருந்தார்கள் . அவர்கள் 200 மீட்டரில் தவறு செய்ததற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் " என்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.