கடந்த சில வாரங்களுக்கு முன் பாகிஸ்தானின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் சையித் அஜ்மலை பந்தை எறிவதாக ஐ.சி.சி நிறுவனத்தால் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தடை செய்யப்பட்டார் . ஆனால் சக்கிங் செய்யும் பந்து வீச்சாளர்களை கண்டுபிடிக்க இந்தியாவின் சுழற் பந்து வீச்சாளர் அஷ்வின் கண்டுபிடிக்க உதவினார் என நீங்கள் நம்புவீர்களா ??
ஆம் !! பிப்ரவரி 26 ஆம் தேதி நடந்த ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியை எதிர்த்து விளையாடியது . அப்போது அஷ்வின் பந்து வீச வந்தார் . வந்த முதல் பந்திலே வங்கதேசத்தின் மொமினல் ஹக்கை அவுட் ஆக்கினார் . அந்த போட்டியில் எப்போது அரைக்கை சட்டை அணியும் அஷ்வின் அந்த போட்டியில் முழுக் கை சட்டை அணிந்து விளையாடினார் .
நீங்கள் கிரிக்கெட்டை கவனமாக பார்ப்பவர்கள் என்றால் , உலகின் முன்னனி சுழற்பந்து வீச்சாளர்கள் முழுக்கை அணிந்து கொண்டு தான் விளையாடுவர் . நரேன் , அஜ்மல் , ஹர்பஜன் சிங் போன்றோர் முழுக்கை அணிந்து தான் விளையாடுவார்கள் .
இது மட்டும் இல்லாமல் அஷ்வின் தனது பவுலிங் அக்ஷனை நரேன் போன்று மாற்றி பவுலிங் செய்தார் . அடுத்த சில போட்டிகளிலும் அப்படியே பவுலிங் செய்தார் . பின்னர் பேட்டி அளித்த அஷ்வின் , " எனக்கு எதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் . நான் இது வரை முழுக்கை சட்டையில் பந்து வீசியதில்லை . எனவே அவ்வாறு பந்து வீசுவது எப்படி இருக்கும் என உணர விரும்பினேன் . உங்கள் முழங்கையை மடக்குவதன் மூலம் அதிக அளவிலான சுழற்சி கிடைக்கும் என்பதால் நான் முயற்சி செய்தேன் . அதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கிறது . இதனை பயன்படுத்தி பலர் இலாபம் அடையும் போது ஏன் நான் மட்டும் சும்மா இருக்க வேண்டும் " என்றார் .
இந்த பேச்சு பந்தை எறியும் பவுலர்களின் தவறை வெளியே கொண்டு வரும் விதமாக இருக்கிறது . ஒருவேளை இது தான் ஐ.சி.சி நிர்வாகத்தை நடவடிக்கை எடுக்க உதவி இருக்குமோ என்று தெரியவில்லை .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.