BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 14 August 2013

உமா சங்கர் ஐ.ஏ.எஸ். - நீங்க நல்லவரா, கெட்டவரா?

பொதுவாக ஜாதக நம்பிக்கை உள்ளவர்கள் ஒரு மனிதனுக்கு 30 வருடத்திற்கு ஒருமுறை தான் ஏழரை வரும் என்பார்கள் ஆனா உமாசங்கர் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு ஒவ்வொரு ஆட்சி மாற்றத்திலும் ஏழரை ஆரம்பித்து விடுகிறது இம்முறை கொஞ்சம் தாமதமாக அதாவது சென்ற ஆண்டு செம்டம்பர் மாதம் பேசியதற்கு இப்பொழுது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

42 வயதாகும் உமாசங்கர் திருநெல்வேலியை சேர்ந்தவர். ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவதற்கு முன்பு தேசியமயமாக்கபட்ட மூன்று வங்கிகளில் பணி புரிந்தவர். 1990 ல் ஐ.ஏ.எஸ் முடித்த உமாசங்கர் 1992 ல் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உதவி கலைக்டராக நியமிக்கபட்டார்.

சுடுகாட்டு ஊழல் வெளிவந்த பொழுது செல்வகணபதிக்கு கொடுத்த குடைச்சல் காரணமாக முதன் முதலாக இவருக்கும் அதிமுகவிற்கும் புகைச்சல் ஆரம்பித்தது. ஆனால் மீண்டும் 1995 ல் திமுக ஆட்சியில் உமாசங்கர் கருணாநிதியின் சொந்த ஊரில் கலைக்டராக நியமிக்கபட்டார்.

இவரது அதிரடி நடவடிக்கைகள் சில இவரின் பால் நேர்மையான அதிகாரி என்றே பெயர் வாங்கி தந்துள்ளது இதுவரை, கல்விதுறையில் நடந்த முக்கியமான ஊழல் ஒன்றை வெளிகாட்டியதின் மூலம் 2001 ல் மீண்டும் அதிமுக ஆட்சியில் மாற்றம் செய்யபட்டார்,  அங்கேயும் நடந்த ஊழலை வெளிச்சம் போட்டு காட்டினார்.

2008 ஆம் ஆண்டு அரசு கேபிளுக்கு நிர்வாக அதிகாரியாக நியமிக்கபட்டார், அப்பொழுது ஆளுங்கட்சி ஆதரவில் செயல்பட்டு வந்த சுமங்கலி கேபிள் விஷன் அத்துமீறி செயல்படுவதை சுட்டிக்காட்டி அரசுக்கு கடிதம் எழுதினார், அந்த நேரங்களில் தயாநிதி மாறனுடன் பிணக்கு ஏற்பட உமாசங்கரும் ஒரு காரணம் என பேசப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக எந்த துறையில் இருக்கிறார் என வெளியே தெரியாத அளவுக்கு இருந்த உமாசங்கரை  மீண்டும் இந்து அமைப்புகள் வெளிக்கொண்டு வந்துவிட்டன, சென்ற வருடம் செம்டம்பர் மாதம் 15 ஆம் தேதி சேலம் ஆத்தூர் பகுதியில் கிறிஸ்துவ அமைப்பு ஒன்றிற்காக பேசிய உமாசங்கர் யாரும் ஜாதகம் பார்க்காதிற்கள், ராகு காலம், கெட்ட நேரம் இருக்கும் நாட்காட்டிகளை தீயிட்டு கொழுத்துங்கள் என பேசியதாக தெரிகிறது.

இந்துத்துவா அமைப்புகள் இந்த பேச்சு எங்கள் நம்பிக்கையை கேலி செய்வது போலவும், எங்களை புண்படுத்துவது போல் உள்ளதாகவும் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது, உமாசங்கர் தரப்போ தாம் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தான் பேசியதாகவும், தாம் எப்போதும் பிற மதங்களை கேவலமாக பேசியது இல்லை என்றும் கூறி வருகிறது.

# நல்ல நேரம் பார்த்து வழக்கு போட்ருக்காங்க போல




1 comment :

  1. அந்த ஆளப் பத்தி பேச நெறைய இருக்கு..எரிச்சலாவும் இருக்கு

    ReplyDelete

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media