புதுச்சேரி கரியமாணிக்கம் பகுதியில் திருமாவளவன் பிறந்தநாளை ஒட்டி வீதியெங்கும் போஸ்டர் ஒட்டி வைத்திருந்தனர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள், அப்பகுதியில் ஐஸ்கிரீம் கடை வைத்திருப்பவர் நேற்று மாலை தமது கடைக்கு அருகில் இருந்த போஸ்டரை அப்புறப்படுத்தியிருக்கிறார்.
அப்போது அங்கு வந்த விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும் கடைக்காரருக்கும் தகராறு ஏற்பட்டது, அவ்வழியே வந்த காவலர் பரந்தாமன் அவர்களை சமாதானம் செய்திருக்கிறார். அப்போது பிறந்தநாள் தான் முடிந்து விட்டதே இன்னும் எதுக்கு போஸ்டர் என சொல்லியிருக்கிறார் காவலர், அதனால் ஆத்திரம் அடைந்த வி.சி. கட்சியினர் அந்த காவலரை தாக்கி அங்கிருந்து மறைந்தனர்.
மீண்டும் இன்று காலை அக்கடைக்கு வந்த சிலர் கடையை அடித்து நொறுக்கியிருக்கின்றனர், அந்த தாக்குதலில் கடையில் இருந்த குளிர்சாதன பொட்டி முதற்கொண்டு அனைத்து பொருட்களுன் சேதம் அடைந்தன. அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் நெட்டப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இதேபோல் கரியமாணிக்கம் பகுதி தனியார் டயர் நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் சிலர் விடுதலைசிறுத்தை கட்சி சார்பில் தொழிலாளர் முண்ணனி என்ற தொழிற்சங்கம் அமைத்து பணி புரிந்து வருகின்றனர். நிறுவனத்தின் வாசலில் இருந்த திருமாவளவன் படம் இருந்த பேனர் அகற்றியதையடுத்து அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அதனால் அப்பகுதி மக்களுக்கும் அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு கல்வீச்சு நடந்துள்ளது, இதில் தொழிலாளி ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். தகவலறிந்த காவல்துறை விரைந்துவந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பியது. மேலும் கலவரம் ஏற்படாமல் தடுக்க ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் அப்பகுதில் ரோந்து பணியாற்றி வருகிறார்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.