நாகர்கோவிலை சேர்ந்த அதிரடி பார்ட்டியான எஸ்.ஆஸ்டின் அதிமுக கவுன்சிலராக இருந்து நகராட்சி சேர்மனாக உயர்ந்து பின் திருநாவுக்கரசு கட்சியாக இருந்த எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சி சார்பாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், நாகர்கோவில் பகுதியில் குறிப்பிடதகுந்த அளவு
சொந்த செல்வாக்குடையவர், அதிமுகவிலிருந்து விலகி தேமுதிகவில் இணைந்தவரான ஆஸ்டின் 2009ல் நாகர்கோவில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு நல்ல வாக்குகள் வாங்கி கடும் போட்டியை தந்திருந்தார், 2011ல் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு தேமுதிக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார், தோல்விக்கு பிறகே கட்சியிலிருந்து சைலண்ட் ஆகியிருந்த ஆஸ்டின் தற்போது கட்சியிலிருந்து வெளியேறிவிட்டார்.
கடந்த சில நாட்களாகவே ஆஸ்டின் வெளியேறும் தகவல்கள் வெளியானது, பிரதமர் கனவில் இருக்கும் அதிமுக தலைமை ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியையும் முக்கியமானதாக கருதுகிறது, எனவே நாகர்கோவிலில் சொந்த செல்வாக்குள்ள ஆஸ்டின் நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுவார் என்ற எண்ணத்தில் அதிமுகவிலிருந்து அழைப்பு வந்த பட்சத்தில் மீண்டும் ஆக்டிவ் பாலிடிக்சில் இறங்க காத்திருந்த ஆஸ்டின் அதை ஏற்றுக்கொண்டே வெளியேறினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜயகாந்துக்கு நேற்று ஆஸ்டின் எழுதிய கடிதத்தில், தேமுதிகவில் தான் இருந்த 7 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் கட்சியின் வளர்ச்சிக்காக முழு நேரமும் பாடுபட்டுள்ளேன் ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக என் மீது ஏனோ நம்பிக்கை இழந்து, கட்சி பணியில் ஈடுபடவில்லை. பல அவமானங்களையும் தாங்கிக் கொண்டு 2 ஆண்டுகளாக கட்சியில்இருந்தேன். மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேமுதிகவை 2 ஆண்டுகளில் உங்களின் செயல்பாட்டால் மக்கள் வெறுக்கும்படியான நிலைக்கு தள்ளியுள்ளீர்கள். தலைமையின் நம்பிக்கையை இழந்து, மக்களின் நம்பிக்கையையும் இழந்த தேமுதிகவில் இனியும் தொடர்வது என்பது என்னை நானே ஏமாற்றிக் கொள்வதாக என் மனம் எண்ணுகிறது. இந்தச் சூழ்நிலையில் தங்களோடு இணைந்து அரசியல் பாதையில் என்னால் பயணிக்க முடியாது என்ற நிலையில் துணைச் செயலாளர் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுகிறேன் என்று கூறியுள்ளார்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.