வண்டலூர் உயிரியல் பூங்காவில் வங்கப்புலிக்கும் வெள்ளைபுலிக்கும் இடைய பழக்கத்தை உருவாக்கி இனப்பெருக்கம் செய்ய வைக்க முயன்ற போது ஆண் புலிக்கும் பெண் புலிக்கும் ஏற்பட்ட மோதலில் பெண்புலி ஆண் புலியை அடித்து கொன்றது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 2011ம் ஆண்டில் இந்தியாவிலேயே முதல் முறையாக வங்கப்புலியுடன்-வெள்ளைப்புலியை இனச்சேர்க்கையில் ஈடுபடுத்துவதற்காக அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் முயற்சிகள் எடுத்தனர். வங்கப்புலி விஜய்யுடன் வெள்ளைப்புலி அகன்ஷாவை நன்றாக பழகவிட்டனர், அதன் பின் இனப்பெருக்கம் செய்து அந்த புலிகள் மூன்று வெள்ளைப்புலி குட்டிகளை பெற்றது.
முதல் முறை இந்த கிராஸ் சோதனை வெற்றிபெற்றதால் இம்முறை பெண் வங்கப்புலி சத்தியாவுடன்ஆண் வெள்ளைப்புலி செம்பியனை பழகவிட்டு இனச்சேர்க்கை செய்வதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தனர். ஆகஸ்ட் மாதம் இனப்பெருக்க காலம் என்பதால் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற சூழலை ஊழியர்கள் அமைத்து கொடுத்திருந்த நிலையில் பழகிக்கொண்டிருந்த பெண் வங்கப்புலி சந்தியா மிகுந்த கோபத்துடன் ஆண் வெள்ளைப்புலி செம்பியன் உடன் பயங்கரமாக சண்டையில் ஈடுபட்டது. இதனை கண்ட ஊழியர்களும், மருத்துவர்களும் இரண்டு புலிகளின் சண்டையை நிறுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் செய்தனர். ஆனால் இரண்டு புலிகள் இடையே சண்டை தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேல் கூண்டிற்குள் நீடித்தது. இதில் மூளையில் பலத்த காயமடைந்த ஆண்புலி செம்பியன் மரணமடைந்தது, பெண் புலிக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது, தீவிர சிகிச்சைக்கு பின் பெண்புலி உடல்நலம் தேறிவந்துள்ளது.
வெள்ளை புலிகளின் எண்ணிக்கையோ மிக குறைவாக உள்ளது, அரிதாக உள்ள புலி இனத்தில் போய் புலிகளுக்கிடையே யான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாமல் "மூட்: அறியாமல் இனப்பெருக்கம் செய்ய நினைத்து இருந்த வெள்ளைபுலியும் இறந்து போனது அதிகாரிகளும் மருத்துவர்களும் இம்மாதிரி சோதனை முயற்சிகளில் மேலும் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்று இந்த சம்பவம் அறிவுறுத்துகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.