BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 16 August 2013

விஸ்வரூபத்துக்கு கிடைத்த அனுதாபம் தலைவாவுக்கு ஏன் கிடைக்கவில்லை?

வாயை திறந்து பேசுங்கள் விஜய்? உண்மையில் என்ன தான் பிரச்சினை?  விஸ்வரூபத்துக்கு கிடைத்த அனுதாபம் தலைவாவுக்கு ஏன் கிடைக்கவில்லை?

விஸ்வரூபம் படத்தில் முஸ்லீம்களை தவறாக காட்டியதாக பல முஸ்லீம் அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள், அதை தொடர்ந்து தமிழக அரசு சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி படத்தை தடை செய்தது என்றாலும்  உண்மையான பிரச்சினை அதன் டிவி ரைட்ஸ்சில் இருந்ததாக குற்றம் சாட்டினார்கள், கமல் தன் பிரச்சினைகளை வெளிப்படையாக மக்களிடம் மீடியாக்கள் மூலமாக பேசினார், தடையை நீக்க கோரி வழக்கு தொடுத்தார், முஸ்லீம்கள் அமைப்பினரின் செயல் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக இருந்ததாக முற்போக்கு சக்திகள் குரல் எழுப்பினர், அனைத்து அரசியல் கட்சியினரும் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவு என்ற பெயரில் விஸ்வரூபம் படத்தை வெளியிட அழுத்தம் கொடுத்தனர்.

கமல் தனது பிரச்சினையை வெளிப்படையாக எடுத்துரைத்து இந்த படம் வெளியாகவில்லை என்றால் என் வீட்டை விற்க வேண்டி வரும், தான் தமிழ்நாட்டை விட்டே வெளியேற வேண்டும் என்று தனது ஆற்றாமையை கோபத்தை வெளிப்படுத்தினார், கடைசியில் முதல்வரின் தனிப்பட்ட பகை இதில் எதுவும் இல்லை என்றும் ஜெயாடிவிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் முதல்வரே டிவி பேட்டி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. திருட்டு விசிடி தாராளமாக கிடைத்தும் விஸ்வரூபம் படம் சாதாரணமாக வெளியாகியிருந்தாலே 2 நாட்களில் சுருண்டிருக்க வேண்டிய படம் மக்கள் தியேட்டரில் தான் பார்ப்போம், பாவம் கமல் என்று அனுதாபம் பெற்று  வெளியாகி பெரும் வெற்றி பெற்றது

விஜய் நடித்த தலைவா படம் வெளியாகததற்கு உண்மையான காரணம் என்ன என்பதே குழப்பமாக உள்ளது.

1) தலைவா படத்திற்கு வரிவிலக்கு வாங்கி தருகிறோம் என்று விஜய் தரப்பு உறுதியளித்ததால் படத்தை பெரும் விலைக்கு வாங்கியதாகவும் படத்திற்கு வரிவிலக்கு கிடைக்காததால்  வருமான இழப்பு ஏற்படும் என்று தியேட்டர்காரர்கள் வெளியிட மறுக்கிறார்கள் என்று ஒரு காரணம் சொல்லப்படுகிறது. இது தான் உண்மையான காரணமென்றால் யாரேனும் பேராசையை விட்டு விட்டு வெளியாக உதவ வேண்டும்.

2) படத்தில் அரசியல் வசனங்கள் ஆளும் கட்சியை தாக்கும் வசனங்கள் இருப்பதால் தான் வெளியிட மறைமுக மறுப்பு உள்ளதாக கூறப்படுகிறது, அப்படியென்றால் அதை வெளிப்படையாக சொல்லி பேசலாமே. ஆனால் படத்தில் அப்படி எதுவும் சிறப்பான வசனங்கள் இருப்பதாக தெரியவில்லை, இருக்கும் மிச்ச சொச்ச வசனங்களையும் வெட்ட தயாரிப்பு தரப்பு தயாராக உள்ளது.

3) வெடிகுண்டு மிரட்டலால் பாதிப்பு என்றால் அரசிடம் பாதுகாப்பு கேட்கலாம், அதற்கு அரசும் போலிசும் மறுப்பு தெரிவித்துள்ளதால் கமலை போல நீதிமன்றத்தை அனுகி அரசு தியேட்டர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிட கோரலாம்.

4) உண்ணாவிரதம் இருக்க போகிறோம் என்றாரே? யாரை எதிர்த்து உண்ணாவிரதம்? அரசு படத்தை தடை செய்யவில்லை, படத்துக்கு யாரும் தடையும் கோரவில்லை பிறகு யாரை எதிர்த்து உண்ணாவிரதம் நடத்த போகிறீர்கள்? வரிவிலக்கு கோர உண்ணாவிரதமா?

டிவி ரைட்ஸ் பிரச்சினையா? அரசியல் பிரச்சினையா? கருத்து சுதந்திர பிரச்சினையா? எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பேசுங்கள் விஜய். அதை விடுத்து கையை கட்டிக்கொண்டு மறைமுகமாக மன்னிப்பு கோருவது போல அம்மாவுக்கு மெசேஜ் தருவது என்றும் உண்ணாவிரதம் அனுமதி கேட்பதுமாக காமெடி செய்யாதீர்கள் விஜய்.

உங்களுக்கும் அரசியல் ஆசை இருப்பதால் கமலுக்கு ஆதரவாக வந்தது போல உங்களுக்கு எந்த அரசியல்வாதியும் வரப்போவது இல்லை, உங்கள் பிரச்சினையை நீங்கள் வெளிப்படையாக பேசுங்கள் அல்லது ஏதாவது உள்ளுக்குள் சமரம் செய்து கொள்ளுங்கள், அதை விடுத்து கருணாநிதிக்கு போட்டியாக உண்ணாவிரத காமெடி செய்யாதீர்கள்.ஒரு பேச்சுக்கு கூட தலைவா படம் பற்றி வாயை திறக்காமல் உள்ளது திரை உலகம் என்பதையும் விஜய் கவனிக்க வேண்டும்

உங்களுடைய பிரச்சினை நியாயமாக இருக்கும் பட்சத்தில் விஸ்வரூபம் பிரச்சினையில் கமலுக்கு ஆதரவாக தமிழக மக்களே இருந்தது போல உங்களுக்கும் தமிழக மக்கள் ஆதரவாக இருப்பார்கள். அதற்கு நீங்கள் முதலில் வாயை திறந்து உண்மையை வெளிப்படையாக‌ பேச வேண்டும். பேசுவீர்களா விஜய்?


5 comments :

  1. arasiyal aasai yarai vitadhu ????

    ReplyDelete
  2. இந்த பிரச்சனையயே சரி செய்ய முதில்ல இவனுக்கு இந்த அரசியல் ஆசை தேவையா

    ReplyDelete
  3. vijay's real face, he is not a leader..............................................................

    ReplyDelete
  4. romba mukiam ippo inda prachinaya..............?

    ReplyDelete

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media