பாஜக கூட்டணியில் இணைகிறதா மதிமுக? வைகோவை காவி துண்டு போட்டுக்கொள்ள சொல்லும் அ.மார்க்ஸ்
வாஜ்பாய் பிரதமராக இருந்த போது திமுக, அதிமுக, பாமக கட்சிகளை போன்று வைகோவும் பாஜக கூட்டணியில் இருந்தார்கள். வைகோவுக்கு மத்திய அமைச்சரவையில் பாஜக தலைவர்கள் சேர சொன்ன போதும் வைகோ அதை தவிர்த்தே வந்தார். வைகோவுக்கு வாஜ்பாயிடமும் பாஜக தலைவர்களிடமும் நல்ல செல்வாக்கும் இருந்தது.
தமிழக கூட்டணி மாற்றங்களால் தான் பாஜக அணியிலிருந்து வைகோ வெளியேறினார், விடுதலைப்புலிகளின் மீளா அழிவிற்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம் என்பதால் காங்கிரசை தமிழகத்திலிருந்து அழிக்க வேண்டும் என்று விரும்பு வைகோ பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு கிளம்பியுள்ளது. தமிழருவி மணியன் அவர்களும் பாஜக, மதிமுக, தேமுதிக கட்சிகள் கூட்டணி வைத்து தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
கூட்டணி குறித்து வைகோ இது வரை எதுவும் சொல்லவில்லை, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து திமுக, அதிமுக என யாருமே இதுவரை எதுவும் பேசவில்லை ஆனால் மதிமுக பாஜக நெருங்குவது போன்ற தோற்றம் வெளியாகிய உடனே வைகோவை சிறுபான்மை ஆதரவு என்ற பெயரில் சிறு குறு திராவிட இயக்கங்களும், அ.மார்க்ஸ் போன்றோரும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்கள், இதுவரை மதிமுகவையும் வைகோவையும் தீவிரமாக ஆதரித்தது போன்றும் தற்போது பாஜக கூட்டணியில் நெருங்கினதால் விமர்சிப்பது போலவும் செயல்படுகிறார்கள். ஆனால் இவர்கள் தான் திமுக மற்றும் கருணாநிதியின் அனைத்து விதமாக கூட்டணிகளுக்கும் சமரசங்களுக்கும் ஏதேனும் ஒரு காரணம் சொல்லி ஏற்று கொண்டவர்கள்.
இன்று அ.மார்க்ஸ் தன்னுடைய ஃபேஸ்புக் மெசேஜில் வைகோவுக்கு ஒரு வேண்டுகோள்., தோளில் தொங்கும் கருப்புத் துண்டை எறிந்து விட்டு காவித் துண்டு ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். என்று எழுதியுள்ளார். இவர்கள் விமர்சனங்கள் சிறு கட்சியான வைகோவை நோக்கி மட்டுமே இருக்கும், பெரிய கட்சியின் தலைவரும் தமிழகத்தின் ஏன் இந்தியாவின் அரசியலை தீர்மாணிப்பதில் ஒருவராக கருணாநிதி மஞ்சள் துண்டு போட்டாலும், காவி துண்டு போட்டாலும் கவலையடைய மாட்டார்கள்
# வைகோ பாஜக கூட்டணியில் இணையலாம் என்பதை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.