பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில், பள்ளியை குண்டு
வைத்து தகர்க்க வந்த ஒரு தற்கொலை படை தீவிரவாதியினை தன்னுயிரை கொடுத்து
நிறுத்தி, பள்ளியில் இருந்த பல உயிர்களை காப்பாற்றியிருக்கிறார், 14 வயது பள்ளி மாணவன் ஐட்ஜாஸ் ஹஸன்.
கடந்த திங்கட்கிழமையன்று, பள்ளிக்கு தாமதமாக வந்ததால், தண்டனையாக பள்ளி வாசலிலே நிறுத்தி வைக்கப்பட்டார், ஐட்ஜாஸ் ஹஸன். அப்போது அவர் நின்று கொண்டிருக்கும் போது, சந்தேகத்திற்குரிய ஒரு நபர் பள்ளிக்குள் நுழையும் போது, ஒரு கல்லை தூக்கி அவர் மீது எறிந்தார். அந்த கல் அந்த நபர் மீது படவில்லை என்றதும், அவனருகே சென்று கட்டிப்பிடித்து, பள்ளிக்குள் அவனை நுழைய விடாமல் அந்த மாணவன் தடுத்தார். உடனே, அந்த நபர், தான் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தபோது, இருவருமே உயிர் இழந்தனர்.
ஐட்ஜாஸ் ஹஸன், அந்த தற்கொலை படை தீவிரவாதியை தடுக்காவிட்டால், பள்ளியின் உள் இருந்த பல நூறு உயிர்கள் கொல்லப்பட்டிருக்கும். அப்படி ஒரு சம்பவம் நடக்கவிடாமல், தன்னுயிரை கொடுத்து தடுத்த, ஐட்ஜாஸ் ஹஸன், உண்மையில் ஒரு ஹீரோ!

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.