BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 10 January 2014

ஆம் ஆத்மி கட்சியில் இணைய சுப.உதயக்குமார் விதிக்கும் நிபந்தனைகள்

ஆம் ஆத்மி கட்சியில் இணைய அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயக்குமாரை அர்விந்த் கெஜ்ரிவாலும் பிரசாந்த் பூஷனும் கேட்டிருந்தார்கள், அதற்கு தற்போது பதிலளித்துள்ள சுப.உதயக்குமார் 5 நிபந்தனைகளை ஆம் ஆத்மி கட்சிக்கு விதித்துள்ளார்.
இது குறித்தி ஆம் ஆத்மி கட்சிக்கு சுப.உதயக்குமார் எழுதிய கடிதம் குறிதுக்கு சுப.உதயக்குமார் தெரிவித்ததாவது

புது தில்லி தேர்தலின்போது, எங்கள் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஆதரவை ஆம் ஆத்மிக்குத் தெரிவித்தோம். தேர்தல் வெற்றிக்குப் பின்னர், அட்மிரல் ராமதாசும், யோகேந்திர யாதவும் பேசினார்கள். எங்கள் நிலையை விளக்கிச் சொன்னேன். பின்னர் டிசம்பர் 29, 2013 அன்று பிரசாந்த் பூஷன் இடிந்தகரைக்கு நேரில் வந்து சந்தித்துப் பேசினார். அவரிடமும் எங்கள் நிலையைச் சொன்னோம். பின்னர் சனவரி 6, 2014 அன்று ஆம் ஆத்மி கட்சித் தோழர்களுக்கு ஒரு கடிதம் எழுதி, ஐந்து நிபந்தனைகளை தெரிவித்திருக்கிறோம்:

[1] தங்கள் கட்சியின் அணுசக்திக் கொள்கையை முறையாக அறிவிக்க வேண்டும்.

[2] தமிழகத்தில் “சாதாரண மக்கள் கட்சி” என்று பெயரிட்டு AAP எனும் துணைப் பெயரை பயன்படுத்துவோம்.

[3] தமிழ் ஈழம், தமிழக மீனவர்கள் மீதான இலங்கையின் தாக்குதல், கடற்கரை கபளீகரம், தாதுமணற் கொள்ளை, நதிநீர்ப் பங்கீடு, சமூக நீதி, சிறுபான்மையினர் உரிமை போன்றப் பிரச்சினைகள் எங்களுக்கு முக்கியமானவை. இப்பிரச்சினைகளில் எங்கள் உணர்வுகளும், ஈடுபாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். கட்சியின் தமிழகக் கிளைக்கு சுயாட்சி அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும். காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளின் மாநில அலுவலகங்களில் ஒரு நாற்காலியை நகர்த்திப் போடுவதென்றாலும் தில்லியிடம் அனுமதி பெறும் அவலம் சா.ம.க.வில் இருக்கக் கூடாது.

[4] தமிழகப் பொறுப்பாளரான திருமதி. கிறிஸ்டி சாமியோடு பணியாற்ற அணியமாய் இருந்தாலும், எங்கள் போராட்டக்காரர்கள் சா.ம.க. பொறுப்புக்களில் இணைத்துக் கொள்ளப்படவேண்டும் (கட்சிக்குள் இன்னொரு குழுவும் இயங்கிக் கொண்டிருப்பதை இப்போது அறிகிறோம்).

[5] தமிழகத்தில் தேர்தல் யுக்திகள் வகுக்கும்போது, தமிழ்த் தேசியம் பேசும், சிறுபான்மையினர் நலம் நாடும் எங்கள் ஆதரவுக் கட்சிகளையும் ஒரு கூட்டணியில் இணைத்துக்கொள்ள வேண்டும்.

ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். போராடும் மக்கள் அனுமதி அளித்தால் மட்டுமே அரசியலில் இறங்குவதும், தேர்தலில் குதிப்பதும் என்று மிகத் தெளிவாக, உறுதியாகச் சொல்லியிருக்கிறோம். இடிந்தகரை ஊர் நிர்வாகக் குழு, எங்கள் பகுதி மக்கள், சமுதாயத் தலைவர்கள், ஆதரவுக் குழுக்கள், ஆதரவுக் கட்சிகள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து, அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து, அனைவரும் உடன்பட்டாலே மேற்கொண்டுத் தொடர்வது என்று முடிவு செய்திருக்கிறோம். ஒரு நல்ல முடிவினை எடுக்க நீங்களும் உதவ வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media