தேமுதிக மாநாடு வெற்றி பெறுவதை தடுக்க அதிமுக அரசு முயல்கிறது என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில், "இந்திய நாட்டின் அடுத்த ஆட்சியை முடிவு செய்யும் பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், நடத்துகின்ற ஊழல் எதிர்ப்பு மாநாட்டை அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்க்கிறார்கள். மாநாடு நடைபெறும் திடல் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் கழகக் கொடி கட்டுவதற்கும், பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கும், பிற அலங்காரங்கள் செய்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிளக்ஸ் பேனர் வைப்பதற்காக கட்டப்பட்ட மூங்கில் சாரம், கொடிக் கம்பங்கள் போன்றவை விழுப்புரம் மாவட்ட காவல்துறையினரால் அகற்றப்பட்டுள்ளது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். " என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுபோய், தினந்தோறும் கொலை, கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு, பாலியல் வன்கொடுமை என்ற நிலைமைதான் உள்ளது. இதை சீர்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக, தேமுதிகவின் பிளக்ஸ் பேனர்களை அகற்றுவதுதான் காவல்துறை செய்யும் வேலையா? என்ற கேள்வியையும் அவர் எழுப்புயுள்ளார்.
ஊழலை எதிர்க்கும் உயர்ந்த நோக்கத்தோடு பொது மக்களுக்காக மாநாடு நடைபெறுகிறது. இதில் பெரும் அளவில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும், இம்மாநாடு மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும் என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.