சென்னையில் பலத்காரம் செய்ய முயன்ற தன் அக்காள் கணவரை தற்காப்புக்காக கொலை செய்த கல்லூரி மாணவி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் துறை அவரை விடுவித்தது.
பெற்றோர் இல்லாத காரணத்தால், தன் அக்காள் வீட்டில் தங்கியிருந்த ஹரிப்பிரியா என்ற கல்லூரி மாணவியை, அவரின் அக்காள் கணவர் மேத்யூ, ஏழு வருடங்களாக தொடர்ந்து பாலியல் தொல்லைக்கு உட்படுத்தி இருக்கிறார். கடந்த வியாழக்கிழமையன்று , வீட்டிற்கு மது போதையில் வந்த மேத்யூ, தனது மனைவி ஹேமாவின் வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி மயக்கமடைய செய்துள்ளார். பின்னர் அவரை வெளியே தள்ளி கதவை பூட்டி, ஹரிப்பிரியாவை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மேத்யூவின் கழுத்தில் ஹரிப்பிரியா தாக்கியுள்ளார். இதில் மேத்யூ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸ், பலாத்கார முயற்சியின் போது, பெண் ஒருவர் தன்னை தற்காத்துக்கொள்ள, என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அடிப்படையில், ஹரிப்பிரியாவை விடுவித்தனர். அவ்ர் சிறைக்கு அனுப்ப படவில்லை என்று தெரிவித்தனர்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.