சிறுசேரி
சிப்காட் வளாகத்தில் டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த உமா மகேஸ்வரி கொலை
செய்யப்பட்ட வழக்கில், இன்று நான்கு பேரை சிபிசிஐடி போலீஸார் கைது
செய்தனர். இவர்கள் மேற்கு வங்கம் மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமானத்
தொழிலாளர்கள் ஆவர். இந்த நான்கு பேரும் கொல்லப்பட்ட உமா மகேஸ்வரியின் செல்போனை
பயன்படுத்தியபோது சிக்கியுள்ளனர்.
சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக சிறுசேரியில் முகாமிட்டு கொலை நடந்த
இடத்தில் தடயங்களை சேகரித்தனர். அப்போது சிகரெட் துண்டுகள் ,மதுபாட்டில்கள் மற்றும் தலை முடிகளும் சிதறிக்
கிடந்தன. இவற்றை சேகரித்து தடயவியல் சோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். உமா
மகேஸ்வரி தனது அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு நடந்து செல்லும் ஒரே ஒரு வீடியோ
காட்சியை தவிர வேறு எந்த ஆரம்ப கட்ட தடயங்களும் போலீசிடம் சிக்கவில்லை.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.