சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் குடும்பத்தோடு வசித்தும் வரும் பாலசுப்ரமணியம் என்பவரின் மகள் உமா மகேஸ்வரி சென்னையில் தங்கி, சிறுசேரியில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் சிப்காட் வளாகத்தில் இருக்கும் புதரின் உள்ளே அழுகிய பிணமாகக் அவர் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து பாலசுப்ரமணியம் கூறுகையில், என் மகளுக்கு ஏற்பட்டது போன்று வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. எங்கள் மகளைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்த போது, போலீசார் உங்கள் மகள் காதல் விவகாரத்தில் எங்காவது ஓடியிருப்பார், பொறுமையாக இருங்கள் கண்டுபிடிக்கலாம் என்று மெத்தனமாக பதில் அளித்தனர். சிப்காட் வளாகத்தை சுற்றி நன்கு சோதனை செய்யுமாறு எனது உறவினர்கள் வலியுறுத்தினார்கள். அதன்பேரில் சோதனை நடத்தியபோது தான் என் மகள் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உமாவை அருப்புக்கோட்டையில் இருக்கும் எனது உறவினரின் மகனுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இப்பொழுது இறுதிச் சடங்கையாவது அருப்புக்கோட்டையில் செய்யலாம் என்று தான் என் மகளின் உடலை அங்கு கொண்டு சென்று தகனம் செய்தோம். குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.