தி.மு.க.வின் 10வது மாநில மாநாடு நடைபெற்றதை ஒட்டி திருச்சியே திருவிழாக்கோலம் அடைந்தது. 250 ஏக்கர் திடலில் நடைபெற்ற மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர். மாநாட்டிற்கு வருகை தந்த தொண்டர்களுக்கு நுழைவுக் கட்டணமாக ஆண்களுக்கு ரூ.50, பெண்களுக்கு ரூ.30 வசூலிக்கப்பட்டது. தொண்டர்கள் வசதிக்காக, 78 கடைகள் அமைக்கப்பட்டது. 550க்கும் மேற்பட்ட கழிவறைகளும் குளியலறைகளும், திறக்கப்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தங்குவதற்கு கோபாலபரத்தில் உள்ள கருணாநிதியின் இல்ல வடிவில் தனித் தனியே 2,500 சதுர அடியில் ஏ.சி., சோபா, நவீன கழிவறை கொண்ட ஹைட்டெக் குடில்களும் அமைக்கப்பட்டன.
ஸ்டாலின், மாநாடு வரவேற்பு குழு தலைவர் முன்னாள் அமைச்சர் நேருவுடன் வந்து கருணாநிதிக்காக மாநாட்டு திடலில் காத்திருந்தபோது, கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கவே, அவர் கொடிக்கம்ப பீடத்தின் மீது ஏறி தொண்டர்களை கட்டுப்படுத்தினார். லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்துதான் வர முடிந்தது. மாநாட்டுத் திடலுக்கு வந்த தலைவர் கருணாநிதியும், பேராசிரியர் அன்பழகனும் காரில் இருந்தபடியே 91 அடி உயரம் கொண்ட முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் நினைவு கொடிமேடையில் அமைக்கப்பட்ட கம்பத்தில், கட்சி கொடியை ஏற்றி மாநாட்டை துவங்கி வைத்தார். அதன் பிறகு மாநாட்டு திடலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் திமுக மாநாட்டில் திரண்டதால் கட்சி தலைவர்கள் உற்சாகமடைந்தனர்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.