வாரிசாக இருப்பதற்காக நாங்கள் வெட்கப்படவில்லை - மு.க.ஸ்டாலின்
இன்று கடலூர் மாவட்டமே அல்லோகலப்பட்டுக்கொண்டிருந்தது, காரணம் கடலூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இன்று நடந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியது பலருக்கும் பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
திமுகவில் பெரும்பாலும் மாவட்ட அளவிலான பதவிகள் கூட வாரிசுகளின் ஆட்சியே தொடரும், இதை போன்றே எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்ற கடலூர் மாவட்ட திமுக பெரும்புள்ளியின் மகன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவரது தந்தையின் மரணத்துக்கு பின் திமுக மாவட்ட செயலாளராக பதவியில் உள்ளார், தந்தைக்கு பின் அந்த பதவி மகனுக்கு தான் சென்றதே தவிர வேறு திமுகவினருக்கு செல்லவில்லை.
திமுக வாரிசு அரசியல் நடத்துகிறது என்று பலர் விமர்சித்தாலும் ஸ்டாலினை மட்டும் பெரும்பாலானோர் விமர்சிக்க மாட்டார்கள், ஏனெனில் ஸ்டாலின் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் பணியாற்றி வருகிறார், படிப்படியாக பதவிகளை பெற்றார்.
இந்நிலையில் எம்.ஆர்.கே.பி. இல்ல திருமண விழாவில் வாரிசாக இருக்க வெட்கப்படவில்லை என்று ஸ்டாலின் பேசியுள்ளார், அதன் விவரம் வருமாறு
"திமுக வாரிசு அரசியல் நடத்துகிறது என்று பலரும் விமர்சனம் செய்கின்றனர். திமுகவில் பணியாற்றும் இளைஞர்களின் செயல்பாடுகள் அடிப்படையில் ஒருவரின் திறமை வெளிப்படுகிறது. அவர்கள் கட்சியின் மாவட்டச் செயலராகவோ அல்லது கட்சி நிர்வாகிகளின் ஒருவராக வாரிசாக தெரியவரும்போது வாரிசு என அடையாளம் காணப்படுகிறார்.
வாரிசாக இருப்பதற்காக நாங்கள் வெட்கப்படவில்லை. அந்த வகையில் நானும் திமுகவில் படிப்படியான பொறுப்புகளை ஏற்று வருகிறேன். சிலருக்கு வாரிசுகள் இல்லை என்பதற்காக நாங்கள் என்ன செய்யமுடியும்? வாரிசுகள் இல்லாதவர்கள் பொறாமைப்படக் கூடாது(ஜெயலலிதா?!).
எனது உழைப்புக் குறித்து தலைவர் பாராட்டியிருக்கிறார். அதுவே எனக்கு மிகப் பெரிய பெருமை. அவரது வாரிசாக இருப்பதற்கு மகிழ்ச்சியடைகிறேன்" என்றார் மு.க.ஸ்டாலின்.
# நீங்க ஏன் சார் வெட்கப்படப்போறிங்க? வாரிசுகளை எல்லாம் பதவியில் உட்காரவைக்கிற நாங்கள் தான் சார் வெட்கப்படனும்

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.