சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழி ஆக்குவதற்கான தீர்மானம் கடந்த 2006-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு இதுவரை குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்காத காரணத்தினால், அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கக் கோரி பகத்சிங், எழிலரசு, மாரிமுத்து ஆகிய வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலும் கடந்த 8 நாள்களாக வழக்கறிஞர்கள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
தமிழை வழக்காடு மொழியாக்குவதற்கான கோரிக்கையை வலியுறுத்தி, இன்று ஆர்ப்பாட்டமும், நாளை தர்ணா போராட்டத்திலும் ஈடுபடுவது என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.