வரும் அக்டோபர் மாதம், கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு தேவையான அனைத்து ரெயில்களும் ஓரிரு மாதங்களில் சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளன. தற்போது கோயம்பேட்டிலிருந்து அசோக் நகர் வரையிலும் ரயில்கள் மேல்மட்ட பாதையில் இயக்கப்பட்டு இறுதி கட்ட சோதனைகள் நடக்கிறது.
கோயம்பேட்டில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து ரெயில்கள் இயக்கப்படுகிறது. விரைவில் ஆலந்தூர் வரை உள்ள 7 ரெயில் நிலையங்களிலும் ரெயில் நின்று செல்வது, சிக்னல்கள் செயல்பாடுகள் குறித்தும் சோதனை செய்யப்பட உள்ளது. தற்போது அசோக்நகர் வரை வெற்றிகரமாக சோதனைகள் நடந்து இருக்கிறது.
கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர், கிண்டி மற்றும் ஆலந்தூர் உள்ளிட்ட ஒரு சில ரயில் நிலையங்களில் கட்டுமான பணிகளை செய்து வந்த ஒப்பந்தகாரர்களுக்கும், மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதால் பணிகள் சற்று தொய்வு ஏற்பட்டது. தற்போது வேறு ஒப்பந்தகாரர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதனால் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதங்களுக்கு பதிலாக அக்டோபர் 2-வது வாரத்தில் வணிக ரீதியாக போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.