நரேந்திர மோடி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு நேற்று பேட்டியளித்தார். அப்பொழுது, குஜராத் கலவரத்துக்கு நீங்கள் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கூறி வருகிறார்களே..? என்ற கேள்விக்கு பதில் அளித்த மோடி, "இந்த மன்னிப்பு கேட்பதும், மன்னிப்பதும் என்ன நடைமுறை? மன்னிப்பு கேட்பதும் இருக்கக் கூடாது. மோடி மன்னிக்கப்படவும் கூடாது. இதைப் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கேட்பது மட்டுமே தீர்வாகி விட முடியாது. இந்த குற்றச்சாட்டில் ஒரு எள் அளவு உண்மை இருந்தாலும், இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்தையும், பாரம்பரியத்தையும் காக்கும் வகையில், பொதுமக்கள் முன்பு மோடி தூக்கிலிடப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இதைப்போன்ற தவறை செய்ய யாரும் துணியாத வகையில், அந்த தண்டனை முன்னுதாரணமாக இருக்க வேண்டும். குற்றம் செய்திருந்தால், மோடி மன்னிக்கப்படவேக் கூடாது." என்று கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.