உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்து முடித்ததும், தகியாவுக்கு சென்ற அவர், அங்குள்ள அலி மியான் தர்காவில் பிரார்த்தனை செய்தார். ஒவ்வொரு தேர்தலின் போதும் வேட்பு மனு தாக்கல் செய்தபின் அலி மியான் தர்காவில் சோனியா பிரார்த்தனை செய்வது வழக்கமாகும். அதற்கு முன்னதாக, பூஜை மற்றும் யாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்தல் வெற்றிக்காக நடைபெற்ற இந்த யாகத்தில் சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரேபரேலி தொகுதியில் சோனியா வேட்புமனு தாக்கல் செய்யும் போது, அவரது மகள் பிரியங்கா மற்றும் மருமகன் ராபர்ட் வதேரா ஆகியோர் வருவது வழக்கம், ஆனால் இம்முறை அவர்கள் இருவரும் சோனியாவுடன் வரவில்லை. அதற்கான காரணங்கள் இன்னும் அறியபடவில்லை.
ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்து பா.ஜனதா சார்பில் அஜய் அகர்வால் என்பவர் போட்டியிடுகிறார். இத்தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளராக மத்திய பிரதேச ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி பக்ருதின் போட்டியிடுகிறார்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.