நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரது சொத்து மதிப்பு ரூ.3.75 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009-ல் வேட்புமனு தாக்கல் செய்தபோது, இதன் மதிப்பு ரூ.70 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து மதிப்பு விவரம்:
ஆ.ராசா பெயரில் அசையும் சொத்துக்கள் - ரூ.1,45,90,709
ஆ.ராசா பெயரில் அசையா சொத்துக்கள் - ரூ.14,87, 419
ஆ.ராசா மனைவி பரமேஸ்வரி பெயரில் அசையும் சொத்துக்கள் - ரூ.93,93,597
ஆ.ராசா மனைவி பரமேஸ்வரி பெயரில் அசையா சொத்துக்கள் = ரூ.14,12,975
மகள் பெயரில் அசையும் சொத்துக்கள் - ரூ.18,15,400.
பரம்பரை சொத்துக்களில் அசையும் சொத்து - ரூ.41,03,540
பரம்பரை சொத்துக்களில் அசையா சொத்துக்கள் - ரூ.14,53,875
மொத்த சொத்து மதிப்பு - ரூ.3,75,42,880
வேட்பு மனுவை தாக்கல் செய்த ஆ.ராசா, "2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நஷ்டம் ஏற்படவில்லை. இதில், நேருக்கு நேர் ஜெயலலிதா விவாதிக்கத் தயாரா என சவால் விடுகிறேன்." என்று கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.