மதுரையை சேர்ந்த மிட்டாய் வியாபாரி இசக்கிமுத்துவின் மகன் மணிமாறன். பிளஸ் 2 தேர்வில் 1129 மதிப்பெண் பெற்று மதுரை மாநகராட்சி பள்ளிகள் அளவில் இரண்டாமிடம் பிடித்தார். குடும்ப வறுமையினால் 8-ம் வகுப்புடன் பாதியிலேயே படிப்பை நிறுத்திய மணிமாறன், அதன்பின் வெல்டிங் வேலை செய்து, அந்த வருமானம் மூலம் பிளஸ் 2 வரை படித்துள்ளார். இவர் பி.இ. கம்யூட்டர் என்ஜினீயரிங் படிக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால் குடும்பப் பொருளாதார சூழ்நிலை அதற்கு தடையாக இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இதையறிந்த மதுரையின் முன்னாள் எஸ்.பி.யும், தற்போதைய தருமபுரி மாவட்ட எஸ்.பி.யுமான அஸ்ராகர்க், நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மணிமாறன் விரும்பும் பாடப்படிப்பை பெற்றுத் தருவதாகவும், கல்விக்கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட பிற செலவுகளை ஏற்றுக் கொள்வதாகவும் அஸ்ராகர்க் உறுதியளித்துள்ளார்.
இதேபோல் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா, மாநகராட்சி ஆணையர் சி.கதிரவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் மற்றும் சில தனிநபர்களும் மணிமாறனுக்கு நிதி உதவி செய்ய முன்வந்துள்ளனர்.
இது குறித்து மாணவர் மணிமாறன் கூறுகையில், "உதவி செய்ய முன்வந்த அனைவருக்கும் நன்றி. எஸ்.பி. முயற்சியில் எனக்கு வெளியூரில் சீட் வாங்கித் தருவதாக கூறியுள்ளனர். தற்போது என் குடும்பம் உள்ள சூழ்நிலையில், குடும்பத்தினரோடு இருந்து கொண்டு படிப்பதுதான் நன்றாக இருக்கும். வெளியூரில் சேர்ந்தால், என்னால் வெல்டிங் வேலை செய்து கொண்டே படிக்க முடியாது. மேலும் தந்தைக்கு உதவமுடியாமல் போவதுடன், குடும்பத்தையும் கவனிக்க முடியாது. எனவே கவுன்சலிங் மூலம் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் சேர்க்கை அனுமதி கிடைக்குமா என எதிர்பார்த்து வருகிறேன். ஆனால் கட்-ஆப் மதிப்பெண் 192 மட்டுமே உள்ளதால் அது சாத்தியமா எனத் தெரியவில்லை. இருந்தாலும் முயன்று வருகிறேன். அப்படி கிடைக்காவிட்டால், பிறர் உதவியின்பேரில் கிடைக்கும் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டியதுதான்' என்றார்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.