மக்களவையின் இரண்டாவது பெண் சபாநாயகராக மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுமித்ரா மஹாஜன் இன்று தேர்வு செய்யப்பட உள்ளார் . இன்று சபாநாயருக்கான தேர்தல் முறைப்படி நடைபெற உள்ளது .
சபாநாயகர் தேர்தலுக்கு 19 பேர் சுமித்ரா மஹாஜன் பெயரை முன் மொழிந்துள்ளனர் . அந்த பட்டியலில் காங்கிரஸின் மல்லிகார்ஜுன் கார்கே , அதிமுகவின் தம்பிதுரை ,சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவகவுடா, தேசியவாத காங்கிரசின் சுப்ரியா சுலே, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் ஜிதேந்திர ரெட்டி அடங்குவர் .
சுமித்ரா மஹாஜன் இதுவரை இண்டோர் தொகுதியில் போட்டியிட்ட எட்டு மக்களவை தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார் . அவரது தொகுதி மக்கள் அவரை "டாய்" என்று பாசமாக அழைப்பர் . டாய் என்றால் மராட்டிய மொழியில் சகோதரி என்று பொருள் .
இந்த நேரத்தில் துணை சபாநயகர் பதவி அதிமுக வின் தம்பி துரைக்கு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது . ஜெயலலிதா மற்றும் மோடி இடையே நடந்த கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது . இதை பயன்படுத்தி பாஜக அதிமுக உடன் தன் உறவை பலப்படுத்ததிக் கொள்ளும் என பலர் நம்புகின்றனர் . இதற்கு முன்னர் துணை சபாநயகராக இருந்த அனுபவம் தம்பி துரை அவர்களுக்கு இருக்கிறது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.