நாடாளுமன்றத்தின் மத்திய அரங்கில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெற்ற போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "பாஜக தற்போது எதிர்க்கட்சி என்ற நிலையில் இல்லை. உங்களுக்கான கடமைகள் பல, நாட்டில் காத்திருக்கின்றன. அதற்காக உழைத்து, இந்த நாடாளுமன்றத்தின் புனிதத்தை நீங்கள் காத்திட வேண்டும்." என்று கூறினார். மேலும் கூட்டத்தில் அவர் கூறியதாவது:
எப்போதும் அடித்தட்டு மக்களிடம் தொடர்பில் இருங்கள். கட்சியின் கடை நிலை பொறுப்பில் இருப்பவர்கள் கூட மக்களுக்காக பாடுபட வேண்டும். அவை சுமூகமாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். அவையின் எல்லா கூட்டங்களிலும், எ.பி க்கள் இடம்பெற வேண்டும். அப்போது தான் நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை காக்க முடியும். உறுப்பினர்கள் அனைவரும் அவையின் விவாதங்களுக்கு ஏற்றவாறு, அனைத்து விவகாரங்களையும் கற்று அறிந்து வர வேண்டும். எல்லா விவாதங்களிலும் பங்கேற்கும்போது தான், அனைத்து விஷயங்களிலும் நமது அறிவை வளர்த்துக்கொள்ள முடியும்.
காலில் விழுந்து வணங்கும் கலாச்சாரத்தை எம்.பி.க்கள் பின்பற்றக் கூடாது. புதிதாக பதவியேற்றுக் கொண்ட எம்.பி.க்கள் சிலர், என் காலில் விழுந்து வணங்கினர். எனது காலில் மட்டும் அல்ல, வேறு எந்த தலைவர்கள் காலிலும் விழுந்து வணங்கக் கூடாது. தேவையற்ற துதிபாடுதல்கள் தேவையில்லை. மாறாக மக்கள் நலப் பணிகளில் தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும்.”
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி எம்.பிக்களிடம் கேட்டுக்கொண்டார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.