BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 6 June 2014

நைஜீரியாவில் போகோஹாரம் தீவிரவாதிகள் மீண்டும் வன்முறையில் இறங்கினர் !!!

நைஜீரியாவின் வடகிழக்கில் உள்ள போகோஹாரம் என்ற தீவிரவாத அமைப்பினர் அந்த இடத்தில் உள்ள 4 கிராமங்களுக்குள் நுழைந்து பயங்கரவாத தாக்குதலில் இறங்கினர் . இந்த தாக்குதலில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் இறந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது .  மேற்கத்திய கல்வி முறையை எதிர்த்து இந்த போகோஹாரம் அமைப்பினர் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் . 

குறிப்பாக சர்ச் மற்றும் கிறிஸ்துவர்களை குறி வைத்து தாக்கும் இவர்கள் நேற்றைய தாக்குதலில் சர்ச் ஒன்றிற்கு தீ வைத்தனர் . நாங்கு கிராமங்களும் தீவிரவாதிகளின் கட்டுபாட்டிற்குள் சென்றுவிட்டதால் தகவல் தொடர்பு சரியாக இல்லை . எனவே பலியானோர் எண்ணிக்கை குறித்து எந்தவொரு சரியான தகவலும் இல்லை . 

இதற்கு முன்னரும் அப்பாவி 200 பள்ளிக் குழந்தைகளைக் கடத்திச் சென்றதும் இந்த அமைப்பினர் தான் என்பது குறிப்பிடத்தக்கது . 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media