BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 6 June 2014

புனேயில் திட்டமிடப்பட்ட வன்முறை இசுலாமியர்கள் மீது நடத்தப்படுகிறது!


பூனா நகரில் 24 வயது இசுலாமிய பணியாளர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். இவர் கொலை செய்யப்பட்ட செய்தியை இந்து ராஸ்ட்ர சேனா என்கிற அமைப்பினர் “ முதல் விக்கெட் விழுந்திருக்கிறது” என்று குறுஞ்செய்தியை பகிர்ந்திருக்கிறார்கள். கொலை செய்யப்பட்ட மோசினின் தந்தை,” கொலை செய்யப்பட்ட தினத்தின் மதியத்தில் கூட அவனிடம் பேசினேன். எங்களுக்கு மதக்கலவரம் பற்றிய அச்சம் இல்லை. ஏனெனில் பூனா பாதுகாப்பானது என்றே நாங்கள் நம்பினோம். அவன் ஒருவன் மட்டுமே எங்கள் குடும்பத்தினருக்கான வருமானத்தினை ஈட்டுபவன்” என்று சொல்லுகிறார். முகநூலில் ஏற்றப்பட்ட படங்களுக்கு எந்தவகையிலும் சம்பந்தப்படாத மோசின் கொலை செய்யப்பட்டது , மதவெறியின் உக்கிரத்தினை காட்டுகிறது.
பூனாவில் 500க்கும் அதிகமானோர் இசுலாமிய வீடுகளை தாக்கி அழித்திருக்கிறார்கள். பல வணிக கடைகள் சேதமாக்கப்பட்டுள்ளது. பல மசூதிகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இசுலாமிய மத குருமார் மீதும், மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்தபட்டிருக்கிறது. இசுலாமியருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கு எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டிருக்கிறது. 20க்கும் மேற்பட்ட பேக்கரிகள் அழிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் அதிகமான அழிவுகள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இசுலாமியர் குடியிருப்புப் பகுதியில் 500க்கும் மேற்பட்டவர்கள் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்கி இருக்கிறார்கள். இப்படியாக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இதைப்பற்றிய பெரிய விவரங்களை, விவாதங்களை ஊடகங்களில் காணமுடிவதில்லை. மோடியின் வெற்றியின் கொண்டாட்ட மனநிலையை கலைத்துவிட விருப்பமில்லாமல் ஊடகங்கள் செயல்படுகின்றனவோ என அய்யம் எழுகிறது.
பூனே நகரில் இசுலாமியர்கள் மீது நிகழ்த்தப்படும் திட்டமிட்ட வன்முறையை கண்டிப்போம். மனிதநேயமற்ற மதவெறிபிடித்த அரசியல் உடனடியாக எதிர்க்கப்படவேண்டியது. அப்பாவிகளை பலியிட்டு வளர்த்தப்படும் மதவெறி அரசியல் தடுத்து நிறுத்த ஒன்றாக குரல் கொடுப்போம்.
எக்காலத்திலும், மதவெறி மனிதர்களை வேட்டையாட அனுமதிக்கக் கூடாது.

Thirumurugan Gandhi


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media