மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் , " அத்வானி அவர்களின் திறமைக்கும் அனுபவத்திற்கும் ஏற்ற பதவி ஜனாதிபதி பதவி . அவரது நீண்ட கால அரசியல் வாழ்க்கைக்கு நாங்கள் மதிப்பு அளிக்கிறோம் . அவருக்கு ஜனாதிபதி பதவி கொடுப்பதே அவருக்கு நாங்கள் செய்யும் மரியாதையாக இருக்கும் .
நாட்டின் துணைப் பிரதமராக இருந்த அத்வானிக்கு சபாநாயகர் கொடுப்பது சரியாக இருக்காது என்பதற்காக தான் அவருக்கு அந்த பதவி கொடுக்கவில்லை . 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு அமைச்சரவைப் பதவி கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டதால் தான் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர்க்கு பதவி கொடுக்க இயலவில்லை " என்றார் .
தற்போது ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் 2017 ஆம் ஆண்டு முடிவடைகிறது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.