கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவில் இருந்து ஸ்விஸ் வங்கியில் பண வைத்துள்ளவர்களின் மதிப்பு 40 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதை நாம் பார்த்தோம் .
இப்போது இந்தியாவின் கருப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கையை ஊக்குவிக்கும் விதமாக ஸ்விஸ் வங்கி அந்த வங்கியில் பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை தயார் செய்துள்ளது . அந்த பட்டியல் இந்திய அரசுடன் பகிரப் பட உள்ளதாக தெரிகிறது .
ஸ்விஸ் வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில் " இந்த பட்டியலில் உள்ள ஒவ்வொருவரும் அறக்கட்டளை மற்றும் பல நிறுவனங்கள் மூலம் கிடைத்த வரி கட்டாத பணத்தை இங்கே சேமித்து வைத்துள்ளதாக சந்தேகிக்கப் படுகிறார்கள் " என்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.