காரைக்காலில் உள்ள ஒரு தனியார் அமைப்பு சார்பில் காரைக்கால் நகராட்சித் மைதானத்தில் நேற்று (ஞாயிறு) மாலை 6 மணிக்கு உங்களில் யார் அடுத்து லாரன்ஸ் என்ற தலைப்பில் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக கடந்த சில மாதங்களாக நமீதாவின் படங்களை போட்டு டிக்கெட்களை விற்பனை செய்திருந்தது. மேலும் நமீதா உள்ளிட்ட கலைஞர்கள் பங்கேற்கும் நடன நிகழ்ச்சி என காரைக்கால் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் விளம்பரம் செய்ததால் இந்த டிக்கெட்கள் நல்ல விலைக்கு விற்று தீர்ந்தன.
ரசிகர்கள் திரளாக நமீதாவின் டான்சை காண டிக்கெட் வாங்கியவர்கள் நமீதா ஆடப்போகும் டான்ஸ்க்காக காத்திருந்தனர், உள்ளூர் கலைஞர்கள் நிகழ்ச்சிகள் நடத்தினாலும் அனைவரும் நமீதாவுக்காக காத்திருந்தனர், ஆனால் நமீதா வரவில்லை என்று நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் கூறியதால் கடும் கோபம் கொண்ட ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர், நாற்காலிகளை தூக்கி வீசி உடைத்தனர், டிக்கெட் காசை திரும்ப கேட்டதற்கு அந்த தனியார் நிறுவனம் காசை கொடுக்கவில்லை, இதில் பல இலட்சம் ரூபாய்களுக்கு மோசடி நடந்திருக்கும் என டிக்கெட் வாங்கியவர்கள் சந்தேகிக்கின்றனர்.
கரண்ட்டு வராததற்கு, கவர்மெண்ட் ஆபிசில் லஞ்சம் வாங்குபவர்களை எதிர்த்து வராத கோபம் நமீதா டான்ஸ் ஆட வரவில்லை என்று வருகிறதென்றால் இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும் என்று சொல்ல தோன்றியதென்றால் இந்த செய்திக்கு ஒரு லைக் போடுங்கள்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.