தான் பெற்ற மகளை 11 மாதங்கள் கற்பழித்து 4 மாத கற்பினியாக்கிய சம்பவம் ஹாவேரியில் நடந்துள்ளது .
ஹாவேரி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் பசய்யா அஜய்குமார் . இவருடைய மனைவி அங்கே உள்ள கோர்ட்டில் வேலை செய்து வருகிறார் . இந்த தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகள் இருக்கிறார் .
அஜய்குமார் வீட்டில் தனியாக இருக்கும் போது தனது சொந்த மகள் என்று கூட பாராமல் , தனது மகளை 11 மாதங்களாக கற்பழித்து வந்துள்ளார் . வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார் .
இந்நிலையில் சிறுமியின் உடல்நிலை சரியில்லாமல் செல்வதை கவனித்த தாய் , மருத்துவமனை அணுகினர் . அவர்கள் சிறுமி 4 மாத கற்பினியாக இருக்கும் அதிர்ச்சி செய்தியைக் கூறினர் . இது குறித்து சிறுமியிடம் கேட்ட போது , அந்த சிறுமி தந்தையைப் பற்றி கூறியுள்ளார் .
இதைக் கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்த அந்த தாய் தனது கணவர் மீது காவல்துறையினரிடம் பூகார் அளித்தார் . இதனால் அஜய்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.