பாலிவுட் நட்சத்திரத்தில் ஒருவரான ஹிருத்திக் ரோஷன் , தனது விவாகரத்தால் சோர்வடைந்து இருந்தார் . தனது பேங் பேங் படத்தின் ட்ரெயிலருக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால் சிறிது உற்சாகத்தில் இருந்த அவருக்கு மீண்டும் இடி விழுந்துள்ளது . அவரது முன்னாள் மனைவி அவரிடம் ஜீவானம்சமாக 400 கோடி கேட்டு விண்ணப்பித்துள்ளார் .
ஹிருத்திக் மற்றும் அவரது மனைவி சுசன் இருவரின் ஒப்புதலுடனும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விவாகரத்துக்கு மனு சமர்பித்து இருந்தனர் . இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்து இருந்தனர் . அவர்களின் இரு மகன்கள் ஹிரிஹான் மற்றும் ஹிரிதான் இருவரும் சுசனுடன் இருப்பார்கள் என முடிவு செய்துள்ளனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.