காமன்வெல்த் போட்டிகளில் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்றார் தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் . இவருக்கு பரிசுத் தொகையாக ரூபாய் 50 லட்சம் கொடுக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார் .
முதல்வர் அனுப்பிய கடிதத்தில் , " நீங்கள் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றும் புதிய சாதனை படைத்தும் நமது நாட்டிற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்த்து இருக்கிறீர்கள் . அதுவும் பங்கேற்ற முதல்முறையே தங்கம் வெல்வது என்பது இன்னும் சிறப்புமிக்கது . நான் ஏற்கனவே 2011 இல் அறிவித்தபடி காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற உங்களுக்கு பரிசுத் தொகையாக 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் " என்று தெரிவித்து இருந்தார் .
2011 இல் தமிழக முதல்வர் ஜெயலலிதா காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்லும் நபருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும் என அறிவித்து இருந்தார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.