BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 4 July 2014

சென்னையில் உள்ள 350 கட்டிடங்களின் நிலைமை என்ன ?? ஒரு மாதத்தில் தெரியும் !!



சென்னை போரூரில் உள்ள கட்டிடம் இடிந்து விழுந்ததில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 61 பேர் இறந்துள்ளனர் . இது போன்ற இன்னொரு சம்பவம் நடக்காமல் தடுக்க சென்னையில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்களை சோதனையிட சி.எம்.டி.ஏ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் .

 ஆய்வு செய்ய 350 கட்டிடங்களை எடுத்துள்ளனர்  சி.எம்.டி.ஏ . 19 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரு குழுவிற்கு 3 பேர் வீதம் 57 பேர் தேர்வு செய்துள்ளனர் , இந்த குழுக்களுக்கான முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது .

இந்த ஆய்வு பணி  ஒரு வார காலம் நடத்தப்படும் என முடிவு செய்துள்ளனர் . எந்த எந்த அடிப்படையில் கட்டிடங்களை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் முடிவு செய்துள்ளனர் . ஆய்வு பணியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர் .  இந்த ஆய்வு பணியை முடித்து அரசிடம் ஒரு மாதத்தில் அறிக்கை சமர்பிக்க உள்ளனர் . எந்த கட்டிடங்கள் தப்பும் , எந்த கட்டிடங்கள் தடை செய்யப்படும் ?? இந்த கேள்விக்கான பதிலைக் காண ஒரு மாதம் காத்திருப்போம் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media