BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 4 July 2014

ஈராக்கில் இந்திய நர்சுகளை கடத்திச் சென்றது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு !!



ஈராக்கில் சன்னி பிரிவைச் சார்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு ஷியா முஸ்லிம் அரசை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர் .  ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு மோசுல் மற்றும் திக்ரிட் உட்பட பல நகரங்களை கைப்பற்றியது . கைப்பற்றிய நகரங்களை ஒன்றாக இணைத்து தனி இஸ்லாமிய நாடு என்று அறிவித்தனர் .

அவர்கள் கைப்பற்றிய திக்ரிட் நகரில் இந்திய நர்சுகள் 46 பேர் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தனர் . திக்ரி பகுதிகளில் அரசு படையினருக்கும் , ஐ.எஸ்.ஐ.எஸ் படையினருக்கும் கடுமையான தாக்குதல் நடந்து வந்தது . ஈராக்கில் உள்ள அவர்களை இந்திய அரசு சர்வதேச செம்பிறை சங்கத்தின் உதவியுடன் தொடர்பு கொண்டது . அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வந்தது . அவர்கள் இந்தியா திரும்ப வேண்டும் என்று உருக்கமான வேண்டுகோள் வைத்தனர் .

இந்நிலையில் அந்த 46 நர்சுகளை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு அடையாளம் தெரியாத இடத்திற்கு துப்பாக்கி முனையில் அழைத்துச் சென்றுள்ளனர் . மொசுல் நகருக்கு அழைத்து சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது . நர்சுகளில் சில பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு இருக்கலாம் என தகவல் வெளியானது .

ஏற்கன்வே அவர்களின் பிடியில் 39 இந்தியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media