காமென்வெல்த்தில் இந்திய வீரர்கள் பல வெற்றிகளை குவித்து வந்தாலும் அதனை பாராட்டுவது என்ன மிகவும் சிலரே . ஏனென்றால் நாம் அனைவருக்கும் கிரிக்கெட் ஒன்று தான் விளையாட்டு. அதை தவிர வேறு எதுவும் தெரியாது. சச்சினை தெரியாது என்றால் பொங்கி எழுவோம், ஆனால் இந்த காமென்வெல்த்தில் தங்கம் வென்றவர்கள் பெயரை கேட்டால் தெரியாது.
மல்யுத்தத்தில் மலை போல் இருக்கிறார்கள் இந்திய வீரர்கள். காமென்வெல்த்தில் மல்யுத்தத்தில் மட்டும் இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் வென்று உள்ளது. இன்று நடைபெற்ற போட்டியில் யோகேஷ்வர் தத் மற்றும் பாபிதா தங்கம் வென்றனர். கீதிகா வெள்ளி பதக்கம் வென்றார். பவண் குமார் வெண்கல பதக்கம் வென்றார். துப்பாக்கி சூடுதலிலும் பல வெற்றிகளை பெற்று உள்ளார்கள். நாம் அதிக பதக்கங்களை வென்றது துப்பாக்கி சூடுதலில் தான்.
தீபா கர்மாக்கர் ஜிம்னாஸ்டிக் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார். ஜிம்னாஸ்டிக்கில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய பெண் இவர் தான். ஆஷிஷ் குமாருக்கு அடுத்து பதக்கம் வெல்லும் அடுத்த இந்தியன் இவர் தான்.
அதோடு நேற்று நடந்த ஹாக்கி போட்டியில் இந்தியா தென் ஆப்பிரிக்காவை 5-2 என வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது. ஸ்குவாஷ் போட்டியில் தீபிகா பள்ளிகல் - ஜோஷ்னா பொன்னப்பா ஜோடி பதக்கம் வெல்லும் வாய்ப்பில் உள்ளது.
இப்படி நாம் பெருமைபடுவதற்கு பல காரியங்கள் இருந்தாலும் இந்தியன் ஏனோ சோகத்தில் தான் இருக்கிறான். ஏனென்றால் இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் இந்தியா தோற்று விட்டதாம். அங்கே தோற்றவனுக்கு இங்கு பல கண்கள் கண்ணீர் சிந்துகின்றன , ஆனால் இங்கே வெற்றி பெற்றவனை வாழ்த்த சில கைகளே வருகின்றன.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.