நைஜீரியாவில் போக்கோ ஹாரம் என்னும் அமைப்பு மேற்கத்திய கல்விமுறைகளை திணிப்பதை எதிர்த்து போராடி வருகின்றனர் . இவர்கள் சில மாதங்களுக்கு முன் 300 மாணவிகளை கடத்தி உலகம் முழுவதையும் அதிர்ச்சியில் உறைய வைத்தனர் .
இப்போது வந்துள்ள உளவுத் துறை அறிக்கையின்படி நிழல் உலக தாதாவான தாவூத் உடன் இந்த அமைப்பினர் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது . இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்குள் மருந்துகளைக் கடத்த திட்டமிட்டுள்ளனர் .
எந்தவொரு அமைப்புக்கும் தொடர்ந்து போரிட பணம் வேண்டும் . பணம் வேண்டும் என்பதற்காக போக்கோ ஹாரம் அமைப்பு இந்தியாவிற்குள் மருந்துகளை கடத்த திட்டமிட்டு இருக்கின்றனர் . அதற்காக தாவூத் இப்ராகிம் உடன் கூட்டு சேர்ந்துள்ளனர் .
சில வருடங்களுக்கு முன் தாவூத்தின் கூட்டம் அல் - கொய்தா அமைப்பிடம் இருந்து மருந்துகளை வாங்கி பதிலுக்கு அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கி வந்தது . இந்த போக்கோ ஹாரம் அமைப்பும் அல்-கொய்தா அமைப்பின் உதவியில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.