காமன்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது . உலகின் பிரபல ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது அவருடன் மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் செல்பி எடுத்துக் கொண்டனர் . இப்போது அந்த மூன்று அதிகாரிகளும் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் .
இது குறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் , " அவர்களும் மூவரும் காமன்வெல்த் பணிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் . ஆனால் நிறுவனத்தில் தொடர்ந்து பணி புரிவர் . அவர்கள் தொழில்முறையில் நடந்து கொள்ள வேண்டும் . இப்படி வீரர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டு இருக்க கூடாது " என்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.