உங்கள் வீட்டில் உள்ள வாஷிங் மெஷினால் அதிக கரண்ட் பில் வருகிறது என்று நினைத்து கவலையா ?? தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என நினைத்து செய்ய முடியாமல் இருப்பவரா நீங்கள் ??
மேலே உள்ள இரண்டு பிரச்சனைகளுக்கும் ஓரே தீர்வை கண்டுபிடித்துள்ளார் தென் கொரிய ஆராய்சியாளர் ஒருவர் . பெரிய வட்ட வடிவில் உள்ள ஒரு இயந்திரத்தை சி ஹூயாங் ரியு என்பவர் 2014 ஆம் ஆண்டின் எலக்ட்ரோலஃஸ் என்னும் நிறுவனத்தின் போட்டிக்காக வடிவமைத்துள்ளார் . இந்த இயந்திரத்தை ட்ரெட் மில் மற்றும் வாஷிங் மெஷினின் கோட்பாட்டினால் உருவாக்கி உள்ளார் .
வட்ட வடிவில் உள்ள இந்த இயந்திரத்தில் ஒருவர் ஓட ஆரம்பித்தால் அவர் ஓடுவதன் மூலம் உருவாகும் இயக்க ஆற்றலால் வாஷிங் மெஷின் செயல்படும் . மீதி ஆற்றல் பிற்கால உபயோகத்திற்காக சேமித்து வைக்கப்படும் . இந்த இயந்திரத்தை " வீல் " என பெயரிட்டுள்ளார் . இதில் சோலார் பேனல் பொறுத்தப்பட்டுள்ளதால் ட்ரெட் மில்லாக இதை உபயோகப்படுத்தாத போது சூரிய ஒளி மூலம் உபயோகப்படுத்தலாம் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.