இன்று நாம் செய்திகளில் தினமும் பார்க்கும் ஒரு செய்தி கற்பழிப்பு செய்தியாக தான் இருக்கிறது . அதில் கவலைபடும் செய்தியாக இதில் பல கல்லூரி மாணவர்களும் மாணவிகளும் இடம்பெற்று உள்ளார்கள். இதற்கு முக்கிய காரணம் கல்லூரி மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது தான் என்று சிலர் கூறுகிறார்கள். பாலியல் வன்முறைகளுக்கு முக்கிய காரணமே செல்போன்கள் தான் என கருத்து நிலவி வருகிறது. எனவே கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறார்கள்.
ஆனால் இது சிறந்த யோசனையாக இருக்காது. செல்போன் பயன்படுத்துவதை தடுப்பதால் மட்டும் குற்றங்களை தடுத்து விட முடியாது. ஒரு பொருளில் சில நல்ல விஷயம் இருந்தால் அதில் தீமைகள் இருப்பதும் இயல்பு தான். அதற்காக அதனை பயன்படுத்தாமல் விட்டு விட முடியுமா. நாம் அதனை சரியாக ப்யன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். செல்போன் மாணவர்களுக்கு தீமைகளை விட நன்மைகளை தான் அதிகம் தருகிறது. எனவே அவர்களது எண்ணத்தில் மாற்றம் இருக்க வேண்டும். அதற்கு நம் கல்வி திட்டத்தில் மாற்றம் இருக்க வேண்டும்.
எனவே அரசே கொஞ்சம் மாற்றி யோசியுங்கள் !!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.